For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி பிரச்சனை: தமிழகம் விபரீத விளைவுகளை சந்திக்கும்-குமாரசாமி எச்சரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

Kumaraswamy
பெங்களூர்: கோடை சாகுபடிக்காக காவிரியில் இருந்து கர்நாடக விவசாயிகள் நீர் எடுப்பதை தடுக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை தமிழக அரசு திரும்பப் பெறாவிட்டால் விவசாயிகள் போராட வேண்டி வரும் என்று அம்மாநில முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கோடை சாகுபடிக்காக காவிரியில் இருந்து கர்நாடக விவசாயிகள் நீர் எடுப்பதை தடுக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இது கர்நாடக மாநில விவசாயிகளின் நலனுக்கு எதிரானது ஆகும். மழை பெய்யாததால் விவசாயிகள் நீரின்றி தவித்து வருகின்றனர்.

தமிழக அரசு தான் தாக்கல் செய்துள்ள மனுவை திரும்பப் பெறாவிட்டால் கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் குதிக்க வேண்டி இருக்கும். அவ்வாறு விவசாயிகள் போராடினால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும். தமிழக அரசு குறிப்பாக கோடை காலத்தில் தண்ணீர் கேட்பது கண்டனத்திற்குரியது. அது அரசியல் ஆதாயத்திற்காகவும், கர்நாடக விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கவும் தான் காவிரிப் பிரச்சனையை எழுப்புகிறது.

தமிழக அரசின் கோரிக்கையை எக்காரணத்திற்காகவும் ஏற்கக் கூடாது என்று நான் கர்நாடக அரசை வலியுறுத்துவேன் என்றார்.

English summary
JD(S) chief Kumaraswamy has warned TN government of serious consequences if it doesn't withdraw the petition filed in supreme court over cauvery issue. He would insist the Gowda government not to yield to TN government's demand at any cost, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X