For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின்வெட்டு குறித்து அப்போவே கருணாநிதியை எச்சரித்தேன்: ப.சிதம்பரம்

By Siva
Google Oneindia Tamil News

Chidambaram
தேவகோட்டை: தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதியிடம் பலமுறை எச்சரித்தேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தேவகோட்டையில் கூறுகையில்,

கடந்த திமுக ஆட்சியிலேயே மின்வெட்டு அதிகம் இருந்தது. அப்போதே இது குறித்து நான் கருணாநிதியிடம் பலமுறை எச்சரித்தேன். மின்வெட்டு இன்னும் அதிகரிக்கும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும்.

மின்வெட்டு பிரச்சனையை தவிர்க்க வேண்டும் என்றால் அணு மின் திட்டங்களைத் தான் செயல்படுத்த வேண்டும். அணல் மின் திட்டத்திற்கு அதிகம் செலவாகும்.
25 லட்சம் டன் நிலக்கரியை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வெறும் 25 டன் யுரேனியத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்ய முடியும். அதனால் தான் அணு மின் நிலைய திட்டத்தை வரவேற்கிறோம்.

ரூ.13,500 கோடி செலவில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடந்தபோதெல்லாம் சும்மா இருந்துவிட்டு தற்போது மட்டும் போராட்டம் நட்ததுவது ஏன்? இலங்கை பிரச்சனையில் காங்கிரஸ் தவிர பிற கட்சிகள் இருவிதமாக பேசியது என்றார்.

English summary
Home minister P. Chidambaram has told that he had warned the then CM Karunanidhi about the powercut issue. He has asked as to why did the people of Kudankulam kept quiet during the construction of nuclear power plant there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X