For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கிகளில் ரூ. 2,317 கோடி எல்ஐசி நிறுவனம் முதலீடு

By Mathi
Google Oneindia Tamil News

LIC Logo
டெல்லி: மத்திய அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நான்கு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 2,137 கோடி நிதியுதவி அளித்துள்ளது. இந்த வங்கிகளில் விருப்ப பங்கு வாங்குவதற்கு இந்த நிதியை எல்ஐசி ஒதுக்கியுள்ளது.

பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 1,037 கோடி அளிக்கிறது. யூனியன் வங்கிக்கு ரூ. 650 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ. 302 கோடியும், யுனைடெட் வங்கிக்கு ரூ. 148 கோடியும் அளிக்கிறது. இத்தகவலை மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தொகைக்கு ஈடாக நான்கு வங்கிகளும் விருப்ப ஒதுக்கீட்டு பங்குகளை அளிக்கும்.

இந்த நிதியுதவி கிடைத்ததன் மூலம் இந்த வங்கிகளின் கடன் வழங்கும் அளவு அதிகரிக்கும். அத்துடன் மூலதன அளவும் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு உயரும் என்று நம்பப்படுகிறது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு மத்திய அரசு ரூ. 1,440 கோடியை நிதியை அளிக்கிறது. இத்தகவலை மும்பை பங்குச் சந்தைக்கு ஐஓபி தெரிவித்துள்ளது. அரசுத் துறை வங்கிகளின் நிதி நிலையை வலுவாக்கும் முயற்சியாக மத்திய அரசு இத்தொகையை முதலீடுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The state-owned Life Insurance Corporation (LIC) has pumped in Rs 2,137 crore in four public sector banks through the preference share route.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X