For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொளுத்தும் வெயில்: சூடு பிடிக்கும் தர்ப்பூசணி விற்பனை!

Google Oneindia Tamil News

Watermelon
தென்காசி: கோடை காலம் துவங்கியதை அடுத்து தென்காசி பகுதியில் தர்ப்பூசணி விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தற்போது ஏப்ரல் மாதம் துவங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாகியுள்ளது. இதனால் கோடையில் வெப்பத்தை தணிக்கக் கூடிய குளிர்பானங்கள், தர்ப்பூசணி பழங்கள் ஆகியவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. கம்பங்கூழ், கேப்பைக்கூழ், கேழ்வரகு கூழ், நீர்மோர், சர்பத் என குளிர்ச்சி அளிக்கக் கூடிய பானங்களை தேடி பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். ஆங்காங்கே புதிதாக கடைகளும் முளைத்து வருகின்றன. இது ஒரு புறம் இருந்தாலும் கோடைக்கே உரிய தார்ப்பூசணி பழ விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

தென்காசி நகரில் புதிய பேருந்து நிலையம், பஜார் பகுதி, குத்துக்கல் வலசை விலக்கு ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான தர்ப்பூசணிகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. 1 கிலோ ரூ.12க்கு விற்கப்படும் இந்த தர்ப்பூசணி பழங்கள் அனைத்தும் திண்டிவனம் பகுதியில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கிலோ தர்ப்பூசணி விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil Nadu people are already finding it difficult to bear the heat of the summer season. Watermelon, cool drinks, butter milk sales have increased in most of the places in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X