For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது அமெரிக்கா- சீனா, இங்கிலாந்தும் பங்கேற்பு

By Mathi
Google Oneindia Tamil News

இஸ்தான்புல்: ஈரானின் அணு சக்தி விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 13, 14 ல் புதிய பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் நடைபெற்ற பெர்சிய வளைகுடா அரபு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹிலாரி, அணுசக்தி விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தெரிவித்து வரும் கருத்துகளில் ஈரானின் அக்கறை பற்றிய அறிய துருக்கியின் இஸ்தான்புல்லில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது என்றார்.

ஈரானிடமிருந்து இந்தியா,சீனா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கைவிடுத்த மறுநாள் ஹிலாரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஈரான் தொடர்பான இப்பேச்சுவார்த்தைக்கு துருக்கி ஏற்பாடு செய்துள்ளடு. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா, சீனா, ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் இஸ்தான்புல் கூட்டத்தில் கலந்து கொள்கின்றன என்று துருக்கி பிரதமர் ரேஸப் தெய்ப் யெர்தோகான் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி ஆய்வு மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது முழுமையாக வளைகுடா பிரதேசத்தையே பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

English summary
The United States and its international partners will meet with Iranian negotiators April 13-14 for a new round of talks over Iran’s nuclear program, Secretary of State Hillary Rodham Clinton said Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X