For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவை சுனாமி தாக்க வாய்ப்பில்லை- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

Google Oneindia Tamil News

Sea
டெல்லி: இந்தியாவை சுனாமி அலைகள் தாக்கும் வாய்ப்பு இல்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணையத்தின் துணைத் தலைவர் சசிதர ரெட்டி கூறுகையில், இந்தியாவை சுனாமி அலைகள் தாக்குவதாக இருந்தால் அந்தமான் நிக்கோபார் பகுதியில்தான் முதலில் தாக்கும். இந்தநிமிடம் வரை அதற்கான அறிகுறியே அங்கு இல்லை. மேலும் இந்தியப் பெருங்கடலில் சுனாமி அலைகள் எழுவதற்கான சாத்தியக்கூறும் தற்போது இல்லை. எனவே சுனாமி அலைகள் தாக்குவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட நிராகரிக்கப்படுகிறது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது பக்கவாட்டில் ஏற்பட்டுள்ளது. எனவே சுனாமி அலைகள் எழ வாய்ப்பி்ல்லை. இந்த வகையான நிலநடுக்கம் சுனாமி அலைகளை ஏற்படுத்தாது. இதுவே மேலிருந்து கீழாக ஏற்பட்டிருந்தால் மட்டுமே சுனாமி அலைகளை எதிர்பார்க்க முடியும்.

இந்த நிமிடத்தில் இந்தியப் பெருங்கடலில் எங்குமே சுனாமி அலைகள் ஏற்படவில்லை என்பதே இப்போதைய நிலவரம் என்றார் அவர்.

English summary
A tsunami watch was issued for countries across the Indian Ocean after a 8.6-magnitude earthquake, the eight worst in the last 100 years, hit waters off Indonesia on Wednesday, triggering widespread panic as residents along coastlines fled to high ground in cars and on the backs of motorcycles. But earthquake and tsunami experts say that quake was horizontal and not vertical, lessening the threat of tsunamis. The National Disaster Management Authority in India said that there was no likelihood of tsunami being formed anywhere in the Indian Ocean.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X