For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழீழத்தில் சிங்களத்தைக் கட்டாயப் பாடமாக்குகிறது இலங்கை அரசு!

Google Oneindia Tamil News

கொழும்பு: வடக்கு தமிழீழத்தில் சிங்களத்தைக் கட்டாயப் பாடமாகக்கத் திட்டமிட்டுள்ளதாம் இலங்கை அரசு. மும்மொழிக் கொள்கை என்ற திட்டத்தைக் காரணம் காட்டி தமிழர் தாயகத்தை சிங்களமயமாக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

மும்மொழிக் கொள்கை என்ற திட்டத்தை சிங்கள அரசு அமல்படுத்தி வருகிறது. அதன்படி சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளை அனைத்து இடங்களிலும் அமல்படுத்துவதாக அது கூறுகிறது. ஆனால் சிங்களத்தை தமிழர் தாயகத்தில் நுழைக்கும் முயற்சியே இது என்று தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தமிழர் பகுதிகளில் தற்போது கல்வித் திட்டத்தில் சிங்களத்தையும் கட்டாயப் பாடமாக்குகிறது சிங்கள அரசு.

தமிழர்களை அவர்களது நாட்டிலேயே அகதிகளைப் போல வாழ வைத்துள்ள இலங்கை அரசு, தமிழர்களின் பகுதிகளில் புத்தர்சிலைகளை அமைத்து பௌத்தமயமாக்கலையும், தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளில் ராணுவ முகாம்கள் அமைத்து ராணுவமயமாக்கலையும் செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழ் மாணவர்களுக்கு சிங்களத்தை கற்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி சிங்களமயமாக்கலையும் தீவிரப்படுத்தியுள்ளதால் தமிழர்கள் பெரும் குமுறலில் உள்ளனர்.

English summary
Lankan govt is making Sinhala as compulsory in North Tamil Eelam, says Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X