For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தோனேசியாவில் நிலநடுகத்தால் பாலம் இடிந்தது, 4 பேர் காயம்

By Siva
Google Oneindia Tamil News

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதமதிப்பை கணக்கிட தேசிய பேரிடர் மேலாண்மை மையம் தனது குழுக்களை நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்தோனேசியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவாகியிருந்த அது தான் கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட 8வது மிகப் பெரிய நிலநடுக்கம் ஆகும். நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களில் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

சுமத்ரா தீவிகளுக்கு அருகே ஏற்பட்ட நில நடுக்கத்தால் இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. ஆனால் அது சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது. இதனால் உயிர் சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அசே பேசார் மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலை பெரிதும் சேதமடைந்ததுள்ளதாக கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்டர் ஷாக் என்னும் அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள் செல்ல பயந்து நேற்றைய இரவை தெருக்களிலேயே கழித்தனர். இன்று அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி்யுள்ளது.

இந்நிலையில் சேதமதிப்பை கணக்கிட தேசிய பேரிடர் மேலாண்மை மையம் தனது குழுக்களை நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளதாகவும், நில நடுக்கத்தால் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த குழுக்கள் தெரிவித்துள்ளன.

அந்த குழுக்கள் தங்கள் அறிக்கையை சமர்பித்த பிறகே சேதமதிப்பு பற்றி தெரிய வரும்.

English summary
The National Disaster Management Agency has sent its teams to quake hit areas in Indonesia to assess the damage. Life returns to normal in Indonesia today after the massive quake on wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X