For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாநில மொழிகளில் எஸ்.எஸ்.சி தேர்வுகள்: தேர்வாணையம் அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் இனி மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசுப்பணித் தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இனி இந்த தேர்வுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று தேர்வாணையத் தலைவர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறினார்.

முதல் முறையாக ஏப்ரல் 22ம் தேதி நடைபெற உள்ள தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப்படும் என்றும், படிப்படியாக கீழ் நிலை மற்றும் இடைநிலை பதவிகளுக்கான தேர்வுகளிளும் மாநில மொழிகளில் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2012-13ம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 1 லட்சம் பேர் மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The SSC has decided to prepare its question paper in regional language while recruiting for the Central armed force. N.K. Ragupathi, the SSC Chairman told reporters on Saturday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X