For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீட்டர் தட்டுப்பாடு: வீடு கட்டியும் கரண்ட் கிடைக்காமல் மக்கள் அவதி!

Google Oneindia Tamil News

Electric Meter
நெல்லை: தமிழகம் முழுவதும் புதிதாக கட்டப்படும் வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு வழங்கப்படும் மின் மீட்டர் தட்டுப்பாடு காரணமாக உடனடியாக மின் இணைப்பு கிடைப்பதில்லை. இதனால் கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

புதிதாத வீடு கட்டுபவர்கள் முதலில் தற்காலிக மின் இணைப்பு பெற வாரியத்திடம் பணம் கட்டி மின் இணைப்பு பெற வேண்டும். கட்டுமானப் பணிகள் முடியும் வரை தற்காலிக மின் இணைப்புக்கு வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இது சாதாரணமாக வீடுகளுக்கு வரும் மின் கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். அதுவும் தற்போது அரசு மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ள நிலையில் இந்த தொகை மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கு முன்பு இணைப்பு கேட்பவர்களுக்கு பணம் கட்டிய அன்றே மின் வாரியத்தினர் புதிய மின் மீட்டரை கொண்டு வந்து பொருத்துவர். ஆனால் தற்போது மின் மீட்டர் தட்டுப்பாட்டால் புதிய வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்களுக்கு தற்காலிக இணைப்பு வழங்க முடியவில்லை. இதனால் புதிய கட்டிடம் கட்டுபவர்கள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் புதிய வீடுகளும், கட்டிடங்களும் கட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

English summary
There is an acute shortage of electric meter in Tamil Nadu which affects the construction work all over the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X