For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் 30 வருடமாகவே தமிழர்கள் அகதிகளாகத்தான் உள்ளனர்-பசில்

Google Oneindia Tamil News

Indian team with Basil Rajapakse
கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் அகதிகளாக இருப்பது 30 வருடமாக இருக்கும் ஒன்றுதான். இருப்பினும் இடம் பெயர்ந்தவர்களில் 95 சதவீதம் பேரை மறுகுடியமர்த்தி விட்டோம் என்று இந்திய எம்.பிக்கள் குழுவிடம் ராஜபக்சேவின் தம்பியான பசில் ராஜபக்சே கூறியுள்ளார்.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பிக்கள் இலங்கை போயுள்ளது. அங்கு இன்று தங்களது முதல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முதலில் பசில் ராஜபக்சேவை அவர்கள் சந்தித்துப் பேசினர். காபி, டீ, பிஸ்கட் உள்ளிட்டவற்றைக் கொடுத்து இந்திய எம்.பிக்களை உபசரித்தார் பசில். பின்னர் அவர் இந்தியக் குழுவினரிடம் பேசுகையில்,

இலங்கையில் அகதிகள் பிரச்சினை 30 வருடகாலமாக இருந்துவரும் ஒன்றாகும். இருந்தபோதிலும் இடம்பெயர்ந்தோரில் 95 வீதமானோரை அனைத்து வசதிகளுடனும் அரசாங்கம் மீள்குடியமர்த்தியுள்ளது.

அவர்களுக்குத் தேவையான உட்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மிகக் குறுகிய காலத்தில் வழக்கமான நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம் என்றார்.

தொடர்ந்து 4 நாட்களுக்கு இந்தியக் குழுவினர் இலங்கையில் பல்வேறு இடங்களுக்குச் செல்லவுள்ளனர்.

நன்றி: தமிழ் வின்

English summary
95% Tamils in North and East have been rehabilitated, says Rajapakse's brother Basil Rajapakse to the visiting Indian MPs team.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X