For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதிர்க்கட்சித் தலைவர் கார்: அரசுக்கும், விஜயகாந்த்துக்கும் 'ஈகோ' பஞ்சாயத்து!

Google Oneindia Tamil News

vijayakanth
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் கார் தொடர்பாக தமிழக அரசுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் இடையே ஈகோ மோதல் மூண்டுள்ளதாக கூறுகிறார்கள்.

தமிழக சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது தேமுதிக. அதன் தலைவர் விஜயகாந்த்தான் எதிர்க்கட்சி்த தலைவராகவும் உள்ளார். இடையில் விஜயகாந்த் சட்டசபையில் நடந்து கொண்ட விதத்தைத் தொடர்ந்து அவரை 10 நாள் சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர் ஜெயக்குமார். அவர் சஸ்பெண்ட் ஆன காலத்தில் எந்தவித சலுகைகளையும் அனுபவிக்க முடியாது என்றும் சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதையடுத்து தனக்கு அரசு வழங்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கான அரசு காரை தனது டிரைவரிடம் கொடுத்து அரசிடமே திருப்பிக் கொடுத்து விட்டார் விஜகாந்த். பத்து நாட்களும் அவர் தன்னை எதிர்க்கட்சித் தலைவர் என்று யாரும் அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், பத்து நாள் சஸ்பெண்ட் முடிந்து விட்டது. ஆனால் இதுவரை விஜயகாந்த் சட்டசபை பக்கமே வராமல் இருக்கிறார். அதேசமயம், அவருக்கான காரை திரும்பக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில்தான் பிரச்சினையாகியுள்ளதாம்.

சஸ்பெண்ட் காலம் முடிந்து விட்டதால் காரைதிரும்ப எடுத்துச் செல்லுமாறு சட்டசபை செயலகத்திலிருந்து விஜயகாந்த்துக்குத் தகவல் போயுள்ளது. ஆனால் அவரோ, அதெல்லாம் முடியாது. நீங்களே காரை அனுப்பி வையுங்கள். நான் வர முடியாது என்று கூறி விட்டாராம்.

இதுகுறித்து அரசுக்குத் தகவல் போனதாம். அதற்கு அரசுத் தரப்போ, காரை வந்துதான் எடுத்துச் செல்ல முடியும், அனுப்பி வைக்க முடியாது என்று கூறி விடுங்கள் என்று தகவல் வந்ததாம். ஆனால் இதை விஜயகாந்த் ஏற்க மறுத்து விட்டதாக கூறுகிறார்கள். முடிந்தால் அனுப்பி வையுங்கள், நான் வந்து எடுத்துச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்று விஜயகாந்த் தரப்பில் கூறப்பட்டு விட்டதாம்.

இந்த கார்ப் பிரச்சினை இரு தரப்புக்கும் இடையே நிலவும் ஈகோவால் ஏற்பட்டது என்று கூறுகிறார்கள்.

இன்னும் இதுபோல எத்தனை பஞ்சாயத்துக்களை தமிழகம் சந்திக்கப் போகிறதோ. மக்கள் ஒருபக்கம் ஏகப்பட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவித்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்கோ நீ பெருசா நான் பெருசா சண்டைதான் முக்கியமாகப் போய் விட்டது.

English summary
Opposition leader Vijayakanth and Tamil Nadu govt are in a new clash over govt car offered to Vijayakanth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X