For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு..கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்!

Google Oneindia Tamil News

Kanimozhi
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்.பியும், தற்போது ஜாமீனில் விடுதலையாகி வெளியே இருப்பவருமான கனி்மொழியை விசாரணைக்கு வருமாறு கூறி அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஏப்ரல் 26ம் தேதியன்று விசாரணைக்கு வருமாறு கூறி கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேரிலோ அல்லது அவரது பிரதிநிதியோ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்பது சம்மன் உத்தரவின் சாராம்சமாகும்.

திமுக குடும்பத்தினரால் நடத்தப்படும் கலைஞர் டிவிக்கு கடனாக கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ. 200 கோடி பணம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு. இதுதொடர்பாகவே கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் தற்போது ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது மீண்டும் கனிமொழியை அமலாக்கப் பிரிவு விசாரிக்கவுள்ளது. சரத்குமாரும் இதுதொடர்பாக விசாரிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

English summary
The Enforcement Directorate has summoned DMK MP Kanimozhi later this week in connection with its probe into alleged financial irregularities in the 2G spectrum allocation case.
 The 43-year-old daughter of former Tamil Nadu Chief Minister M Karunanidhi has been asked by the agency to either come herself or send an authorised representative for submission of financial documents and recording of statement on April 26, ED sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X