For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை- இந்தோனேசியா இடையே ஜூன் முதல் நேரடி விமான சேவை

By Mathi
Google Oneindia Tamil News

Garuda Airlines
சென்னை: இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்குமான இடையேயான நேரடி விமான சேவை வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக இந்தோனேசியா தூதர் காலிப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியா-இந்தோனேசியா இடையேயான நல்லுறவு சிறப்பாக இருந்து வருகிறது. இந்தியாவில் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்காக 33 பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இருக்கிறோம்.

தூத்துக்குடி அருகே 1,500 மெகாவாட்டில் புதியதாக உருவாக்கப்பட உள்ள அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி வழங்குவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சரையும், மின்சார வாரிய அதிகாரிகளையும் சந்தித்து பேச உள்ளோம். தமிழகத்தோடு வர்த்தக தொடர்பை மேம்படுத்திக்கொள்ளவும் முடிவு செய்துள்ளோம்.

சென்னைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே நேரடி விமான சேவையை (கருடா ஏர்லைன்ஸ்) ஜுன் மாதம் தொடங்க இருக்கிறோம் என்றார் அவர்.

English summary
Boosting the bilateral trade relations between India and Indonesia, besides wooing the potential tourists from South India, State carrier Garuda Indonesian Airlines is launching direct services from Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X