For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆபாச சிடி சர்ச்சை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து சிங்வி ராஜினாமா

By Mathi
Google Oneindia Tamil News

 Abhishek Manu Singhvi
டெல்லி: ஆபாச சிடி சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

அபிஷேக்சிங்வியும் ஒரு பெண் வழக்கறிஞரும் ஏடாகூடமாக இருக்கும் ஆடியோ சிடி இணையத்தில் உலாவி சர்ச்சையை உருவாக்கியது. சிங்வியும் நீதிமன்றப் படிகளில் ஏறி அது ஒரு பொய்யான சிடி என்று கூறி வாதிட்டு வந்தார். கடைசியாக அவரது ஓட்டுநரே போலி சிடி தயாரித்து ஆப்படித்த விவகாரம் தெரியவந்தது.

இந்த சர்ச்சை வெளியானதுமுதல் காங்கிரஸ் கட்சியும் அவரை ஓரம்கட்டி வைத்துவிட்டது. ஒவ்வொரு திங்கள்கிழமையும் செய்தியாளர்களை காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் சிங்வி சந்தித்து வந்தார். ஆனால் கடந்த சில வாரங்களாக அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் நாடாளுமன்றத்தின் சட்டம் மற்றும் நீதிக்கான நிலைக்குழுவின் தலைவர் பொறுப்பு ஆகியவற்றிலிருந்து அவர் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இருப்பினும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாலும் நாளை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பக் கூடும் என்பதாலும் காங்கிரஸ் கட்சியே அவரை ராஜினாமா செய்யுமாறு நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது.

ராஜினாமா செய்துவிட்டால் மட்டும் போதுமா? நாடாளுமன்றத்தின் மரியாதையைக் கெடுத்துவிட்ட சிங்வி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா இப்போதே போர்க்கொடி தூக்கிவிட்டது. நாடாளுமன்றத்தை முடக்க சிங்வி விவகாரமும் எதிர்க்கட்சிகளின் கைகளுக்கு கிடைத்துவிட்டது.

English summary
Congress Rajya Sabha MP Abhishek Manu Singhvi has quit as the chairperson of Parliament Standing Committee on Law and Justice following the CD controversy and as the as the Congress spokesperson
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X