For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை ஆதீனம் என்ற ஆலமரத்திற்குக் கீழே முளைத்த காளான் நான்-நித்தியானந்தா

Google Oneindia Tamil News

Nithyanantha with Madurai Aadheenam
மதுரை: மதுரை ஆதீனம் எனது வயதை விட மிக பெரியவர். அனுபவசாலி. அவர் ஒரு ஆலமரம். அம் மரத்திற்கு கீழ் காளான் முளைப்பது இயற்கைதான். காளானாக இருந்து சிறப்பாக பணியாற்றுவேன் என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.

மதுரை ஆதீன மடத்தில் இன்று மதுரை ஆதீனத்துடன் இணைந்து நித்தியானந்தா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஆதீன மடம் என்பது ஒரு கடல் போன்றது. இதை செம்மையாக நடத்துவேன். சன்னிதான உத்தரவுபடி நான் நடப்பேன். என் மீதான குற்றச்சாட்டை சட்ட ரீதியாக நிரூபிப்பேன். நான் இந்த விஷயத்தில் யாரையும் குற்றம் சாட்டவில்லை. பழிப்பது தவறல்ல. அதற்கு பதில் சொல்வேன். ஆனால் சிலர் அழிக்க நினைக்கிறார்கள். அதுதான் தவறு என்கிறேன். வேதனைப்படுகிறேன்.

என்னை தமிழக மக்கள் ஏற்பார்கள்

தமிழ்நாட்டில் 800 தியான மையம் உள்ளது. 12 லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள். எனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்தாலும் இன்னும் இங்கு தியான பீடம் நடந்து வருகிறது. பக்தர்கள் எல்லாம் வந்து செல்கிறார்கள். எனவே என்னை தமிழக மக்கள் ஏற்று கொள்வார்கள்.

என் ஆசிரமத்திற்கு எல்லோரும் வரலாம். அவர் வரக்கூடாது, இவர் வரக்கூடாது என சொல்ல முடியாது. உலக அளவில் சிறந்த ஆன்மீகவாதிகளின் பெயர்களை வெளிநாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் உள்ள ஸ்ரீரவி சங்கர், அமிர்தானந்தமயி, குருதேவ், என் பெயர் இடம் பெற்றுள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

மதுரை ஆதீன மடத்தில் 293-வது மகா சன்னிதானமாக மனபூர்வமாக ஏற்று கொண்டு முழுமையாக பணியாற்றி சைவ சித்தானந்தத்தை உலகம் முழுவதும் பரப்ப பாடுபடுவேன். நானும் 292-வது சன்னிதானமும் சேர்ந்து ஆதீன மடத்தை முறையாக நடத்துவோம். மதுரை ஆதீனத்துக்குட்பட்ட 4 கோவில்கள் உள்ளது. 4 கோவில்களுக்கும் இந்த ஆண்டிற்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இன்று முதல் ஆதீன மடத்தில் தினசரி அன்னதானம் வழங்கப்படும். 24 மணி நேரமும் இது வழங்கப்படும்.

மேலும் ரூ. 4 கோடி காணிக்கை தருவேன்

குருவுக்கு ரூ.1 கோடி பாத காணிக்கை வழங்கி இருக்கிறேன். மேலும் ரூ.4 கோடி பாத காணிக்கை சமர்பிக்க இருக்கிறேன். மேலும் எனது ஆசிரமத்தில் உள்ள டாக்டர்கள், என்ஜினீயர்கள், படித்த சன்னியாசிகள் 50 பேரை ஆதீன மடத்தின் நிர்வாகத்தை கவனிக்க மதுரைக்கு அனுப்பி வைப்பேன்.

எனது ஆசிரமத்தில் கல்வி பணியாற்றுவது போல மதுரை ஆதீன மடத்திலும் கல்வி பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பள்ளி, கல்லூரிகள் நிறுவப்படும். வருகிற ஜுன் 5-ந்தேதி கனகாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இவ்விழாவையொட்டி 100 கிராமங்களில் பள்ளிக்கூடம் தொடங்கப்படும். எனக்கு 40 நாடுகளில் ஆசிரமம் உள்ளது. 1 கோடியே 20 லட்சம் சீடர்கள் உள்ளனர்.

ஆலமரத்திற்குக் கீழே முளைத்த காளான்

மதுரை ஆதீனம் எனது வயதை விட மிக பெரியவர். அனுபவசாலி. அவர் ஒரு ஆலமரம். அம் மரத்திற்கு கீழ் காளான் முளைப்பது இயற்கைதான். காளானாக இருந்து சிறப்பாக பணியாற்றுவேன். ஆதீனம் ஒரு கடல். நான் அதில் ஒரு துளிதான். இந்த கடலில் கலப்பதில் ஆனந்தமடைகிறேன். ஆதீனம் ஞானமிக்கவர். எனக்கு நல்ல வழி காட்டுபவர். எனவேதான் இந்த பெரிய பொறுப்பை ஏற்றேன். என் மீது பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. ஆன்மீக பணியாற்றும்போது ஓரிரு இடையூறு ஏற்படுவது வழக்கம்தான் என்றார் அவர்.

English summary
I am like mushroom, growing under a banyan tree. Madurai Aadheenam is like a banyan tree, I am the mushroom, said Nithyanantha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X