For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊதிய பாக்கி கோரி தொழிலாளர் நீதிமன்றத்தில் கிங்பிஷர் ஊழியர்கள் வழக்கு தொடர முடிவு

By Mathi
Google Oneindia Tamil News

Kingfisher Airlines staff
மும்பை: தங்களுக்கு வழங்கப்பட் வேண்டிய ஊதியத்தை வழங்கக் கோரி தொழிலாளர் நலநீதிமன்றத்தில் வழக்குத் தொடர கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம். கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் சம்பளம் வழங்கப்படாமல் இருக்கிறது என்பது ஊழியர்களின் புகார்.

இதைத் தொடர்ந்து விமான நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கான ஊதியத்தை வழங்கக் கோரி தொழிலாளர் நலநீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஊதிய பாக்கியை ஏப்ரல் 20-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் கூட கிங்பிஷர் ஏர்லைன்ஸின் விமானிகளும் பொறியாளர்களும் அந்த நிறுவனத்துக்கு கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Claiming that their salaries had still not been cleared, a section of Kingfisher Airlines staff including engineers and pilots is mulling the option of moving the Labour Court to expedite settlement of their dues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X