For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் போலீஸ் என்னை சித்திரவதை செய்தது-நாடாளுமன்றத்தில் அழுத காங். பெண் எம்.பி.!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் மாநில போலீசாரால் தாம் சித்ரவதை செய்யப்பட்டதாக லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி. பிரபாபென் டேவியாட் கண்ணீர் மல்க புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத் மாநிலம் உருவான 52-வது நாள் நேற்று பழங்குடிகள் அதிகம் வசிக்கும் டகோட் மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து காங்கிரஸ் எம்.பி பிரபாபென் டேவியாட், 4 எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். ஆனால் இதைத் தடுத்த போலீசார் பிரபாபென், 4 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இன்று இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எம்.பி. பிரபாபென் எழுப்பினார். அப்போது தம்மை போலீசார் தான் உள்பட கைது செய்யப்பட்ட அனைவரையும் துன்புறுத்தியதாகவும் தமது இரண்டு கைகளில் இருக்கும் காயத்தையும் கண்ணீரோடு அவர் கூறினார். அவருக்கு ஆதரவாக காங்கிரசின் கிரிஜா வியாஸ் எழுந்து குரல் கொடுத்தார்.

இதையடுத்து எழுந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் மாநில அரசுடன் பேசுவதாக உறுதியளித்தார்.

அதேசமயம், இந்த விவகாரத்தை நாடாளுமன்ற உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.

English summary
A Congress MP from Gujarat broke down in Parliament on Wednesday saying she was detained and harassed by police on 'Gujarat Foundation Divas'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X