For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சித்திரை திருவிழா: 6ம் தேதி அழகர் ஆற்றில் இறங்குகிறார்

Google Oneindia Tamil News

மதுரை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரும் 6ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கள்ளழகர் எதிர்சேவை வரும் 5ம் தேதியும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் உற்சவம் வரும் 6ம் தேதியும் நடைபெறுகின்றன. இதையொட்டி வைகை அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறந்துவிட அரசுக்கு மதுரை கலெக்டர் சகாயம் பரிந்துரை செய்துள்ளார்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதையொட்டி வைகை அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் கடந்த 2010ம் ஆண்டு நடந்த சித்திரை திருவிழாவின் போது அணை வறண்டு போனாதால் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதயடுத்து ஆற்றில் தொட்டி கட்டி தண்ணீர் நிரப்பி அதில் கள்ளழகர் இறங்கினார்.

2011ம் ஆண்டு சித்திரை திருவிழாவுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கோடை மழை பெய்துள்ளதால் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிகிறது.

English summary
Lord Kallazhagar will enter the Vaigai river on may 6. So, Madurai collector Sagayam has requested the TN government to release water from Vaigai dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X