For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமரி மாவட்ட டாஸ்மாக் கடைகளின் ஏப்ரல் மாத வருவாய் ரூ.54 கோடி

Google Oneindia Tamil News

Tasmac shops
குமரி: குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.54 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளன.

குமரி மாவட்டத்தில் 147 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. நகர பகுதிகள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குமரி மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் பெருமளவு குறையவில்லை.

பிராந்தி, பீர் வகைகள் பெட்டி, பெட்டியாக காலியாகின. பிராந்தி வகைகளை விட பீர் வகைகளின் விற்பனை படுஜோராக உள்ளது. புதுப்புது சுவைகளில் பிராந்தி, பீர் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் மது பிரியிர்கள் சளைக்காமல் வாங்கி குடிக்கின்றனர். ஏப்ரல் மாதம் மகாவீர் ஜெயந்திக்காக 1 நாள் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அன்று மட்டும் விற்பனை நடைபெறவில்லை. அதற்கு முதல் நாள் பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து பல இடங்களி்ல் விற்பனை நடந்தது. இதற்காக பலர் போலீஸ் சோதனையில் சிக்கி கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.54 கோடியே 35 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது.

English summary
TASMAC shops in Kanyakumari district have generated a revenue of Rs.54.35 crore in the month of april. Beer sales seems to get improved day by day compared to other drinks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X