Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

காற்றாலை மின்சாரம் இருந்தும் மின்தடையா?: குமுறும் மக்கள்

Posted by:
Published: Tuesday, May 8, 2012, 17:40 [IST]

தென்காசி: தென்காசி பகுதியில் மீண்டும் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தினமும் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

வர்த்தக நிறுவனங்களிலும் பாதிப்பு ஏற்பட்டது. மின் தடையை சமாளிக்க மக்கள் இன்வெர்ட்டர் வாங்கியதால் அதன் விற்பனை அமோகமாக இருந்தது. ஆனால் இம்மாத துவக்கத்தில் மின்தடை வெகுவாகக் குறைந்தது. தென்மேற்கு பருவக் காற்று வீச துவங்கியதால் காற்றாலைகளில் தாராளமாக மின் உற்பத்தி இருந்தது.

இதையடுத்து மின்தடைக்கு விடை கொடுக்கப்பட்டது. இதனால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மகிழ்ச்சி ஒரு சில நாட்களே நீடித்தது. நேற்று மீண்டும் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

காலையில் காற்றின் வேகம் சற்று குறைவாக இருந்தது. இதனால் காற்றாலைகளில் மின் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பகல் நேரத்தில் காற்றாலைகளில் தாராளமாக மின் உற்பத்தி இருந்தும் மின்தடை செய்யப்படுகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தென்காசி பகுதியில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரம் வெளியிடங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சாரம் முழுவதையும் இப்பகுதியிலேயே பயன்படுத்தப்பட வேண்டும்.

உபரி மின் உற்பத்தி இருந்தால்தான் வெளியிடங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். இது தொடர்பாக மின்வாரியத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மட்டுமல்ல, தமிழகத்தின் பிற பகுதிகளிலும், குறிப்பாக சென்னையிலும் கூட இதேதான் நிலைமை. மறுபடியும் கரண்ட் கட் மக்களை வாட்ட ஆரம்பித்துள்ளது.

English summary
Tenkasi people are angry with the EB as there was no power for several hours on monday. They compalined that inspite of the wind mill power, EB cut power in their areas.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
New Zealand: 153 / 4, 49.4 Overs
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 23 runs
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST