For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்!

By Siva
Google Oneindia Tamil News

நெல்லை: காதலியை தனதாக்கிக் கொள்ள இன்னொரு வாலிபரிடம் ரூ.10,000 பேரம் பேசி அந்த பணத்தை கொடுக்க திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு தோப்பு தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். பஸ் கண்டக்டர். அவரது மகன் மணிகண்டண் (20). அவர் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி திருத்துபனை கிராமத்தில் தண்ணீர் எடுத்துவந்த லென்சா (25) என்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடினார். அப்போது பொதுமக்கள் அவரைப் பிடித்து நையப் புடைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

விசாரணையில் மணிகண்டன் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

எனக்கு சிறு வயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் இல்லை. அதனால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கோவிலில் சாமி சிலைக்கு அலங்காரம் செய்யும் வேலைக்கு சென்றேன். அங்கு தான் முதன் முதலாக திருட ஆரம்பித்தேன். கோவிலில் உள்ள சிறிய சிலைகள், பூஜை பொருட்களை திருடி அவற்றை விற்று வரும் பணத்தில் ஆடம்பரச் செலவு செய்தேன்.

பின்னர் கோவில் அதிகாரிகளுக்கு இது குறித்து தெரிய வந்ததையடுத்து என்னை வேலையில் இருந்து நீக்கினர். இதையடுத்து பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்றேன். பெயிண்ட் அடிக்கச் செல்லும் வீடுகளில் உள்ள வெள்ளி, பித்தளை பொருட்களை திருடி விற்றதால் அந்த வேலையில் இருந்தும் துரத்தினர். மாந்திரீகத்தில் விருப்பம் இருந்ததால் மந்திரவாதியாக விரும்பி எனது அத்தை வீட்டில் இருந்து தங்க சங்கிலியைத் திருடி ரூ.30,000க்கு அடகு வைத்தேன்.

அந்த பணத்தை வைத்து மாந்திரீகம் செய்யத் தேவையான ஐம்பொன் சிலை மற்றும் மாந்திரீக புத்தகங்களை வாங்கினேன். இதற்கிடையே அத்தை வீட்டில் நகை திருடியது தெரிய வந்து குடும்பத்தில் பிரச்சனையாகிவிட்டது. ஆனால் எனது தந்தை நகைக்குரிய பணத்தை கொடுத்ததால் போலீசில் புகார் கொடுக்கவில்லை.

பின்னர் வள்ளியூரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது அந்த கடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணும், நானும் காதலித்தோம். ஆனால் அந்த பெண்ணை இன்னொரு வாலிபரும் காதலித்தார். இதனால் எனக்கும், அந்த வாலிபருக்கும் அடிக்கடி தகராறு வந்தது. ஒரு கட்டத்தில் காதலியை எனதாக்கிக் கொள்ள அவரிடம் பேசினேன். ரூ.10,000 கொடுத்தால் என் காதலியை மறந்துவிடுவதாக அவர் தெரிவித்தார்.

கையில் பணம் இல்லாததால் திருட முடிவு செய்து திருக்குறுங்குடி மேற்கு வட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் சங்கிலியை பறித்தேன். ஆனால் அது கவரிங் நகை. அதன் பிறகு திருக்குறுங்குடி திருத்துபனை கிராமத்தில் தண்ணீர் எடுத்து வந்த லென்சாவின் சங்கிலியைப் பறித்தபோது தான் பொதுமக்களிடம் சிக்கினேன் என்றார்.

சங்கிலி பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

English summary
Police arrested Manikandan(20) in chain snatching case. He did so to give Rs.10,000 to another youth who promised the former to forget his lover. Manikandan fell in love with a girl who was also loved by another guy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X