For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறையிலடைத்து என்னை நேரடி அரசியலில் குதிக்க வைத்துவிட்டார் ஜெ. - எம். நடராஜன்

By Mathi
Google Oneindia Tamil News

திருச்சி: மறைமுக அரசியலில் இருந்த தம்மை கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலம் நேரடி அரசியலுக்கு இழுத்துவிட்டார் ஜெயலலிதா என்று எம். நடராஜன் தெரிவித்துள்ளார்.

நில அபகரிப்பு உள்ளிட்ட புகார்களின் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடராஜன் நேற்று ஜாமீனில் விடுதலையானார்.

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

என் மீது போடப்பட்ட 6 வழக்குகளுமே பொய்யானவை. எனக்கு எதிராகப் புகார் கொடுத்தவர்களில் ஒருவரைக் கூட நான் நேரில் பார்த்தது இல்லை. இந்த வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்.

எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பாக இருந்தது நானும் எனது மனைவியும்தான். நாங்கள் எந்தத் தவறுமே செய்யவில்லை. துரோகமும் செய்யவில்லை. அதிமுகவை உடைக்கவும் முயற்சிக்கவில்லை.

சசிகலாவை மறைமுகமாக மிரட்டி அவர் பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில்தான் தமக்குத் தெரியாமல் தமது குடும்பத்தினர் தவறு செய்ததாக கூறப்பட்டது. என்னை சிறையில் அடைத்து மறைமுக அரசியல் செய்து கொண்டிருந்த என்னை நேரடி அரசியலுக்கு வரவழைத்துவிட்டார் ஜெயலலிதா என்றார் அவர்.

English summary
After three months of incarceration, Sasikala’s husband M Natarajan, who has obtained bail in all the cases against him, was released from the Tiruchy Central Prison here on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X