For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோமாலிய கடற்கொள்ளையர்களால் எண்ணெய் கப்பல் கடத்தல்- 11 இந்தியர்களின் கதி என்ன?

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: லைபீரிய நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றை அரபிக் கடற்பரப்பில் ஓமன் அருகே சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

ஓமன் கடற்கரையிலிருந்து 630 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவருடன் இந்தோனோசியா நோக்கி எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பலை வழிமறித்து கடத்திச் சென்றுத் தாக்கினர். கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலில் 11 இந்தியர்களும் இருந்தனர்.

கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பல் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது. கடத்தப்பட்டோரை மீட்க அந்தந்த நாட்டு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

சோமாலிய கடற்படையினரிடம் தற்போது 17 கப்பல்களும் 300க்கும் மேற்பட்டோரும் பிணைக் கைதிகளாக சிக்கியிருக்கின்றனர். சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து சரக்குக் கப்பலைப் பாதுகாக்க அந்தந்த நாட்டு கடற்படையினர் கப்பல்களில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் சோமாலிய கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர் கதையாகி வருகிறது.

English summary
A Greek-owned oil tanker with a 15 member crew, mostly Indians and Filipinos, has been hijacked off the coast of Oman in the Arabian Sea. The tanker was reported to be heading for Somalia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X