For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய தலைமை செயல் அதிகாரி லெவின்சனால் யாகூ மேம்படுமா?

By Mathi
Google Oneindia Tamil News

Levinsohn
சான் பிரான்சிஸ்கோ: யாகூ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ஸ்காட் தாம்சன் 4 மாத காலத்திலேயே விலக வேண்டிய நிலையில் இடைக்கால செயல் அதிகாரியாக லெவின்சன் பொறுப்பேற்கிறார்.

யாகூவின் இணை நிறுவனர் ஜெர்ரி அப்பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் தாம்சன் தலைமைச் செயல் அதிகாரியாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அப்போது அவர் யாகூ நிறுவனத்திற்கு கொடுத்திருந்த தம்மைப் பற்றிய விவரக் குறிப்புகளில் தமது கல்வித் தகுதியை அவர் மிகைப்படுத்திக் கூறியிருந்தது தற்போது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தாம்சன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதாவது 1979-ம் ஆண்டு தாம் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி பெற்றிருந்ததாகக் கூறியிருந்தார். ஆனால் அவர் அக்கவுண்டன்சி துறையில்தான் டிகிரி பெற்றிருந்தார். இருப்பினும் கடந்த வாரம் நடைபெற்ற யாகூ இயக்குநர்கள் கூட்டத்தில் தாம் தைராய்டு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவருவதாக தாம்சன் கூறியதாக வால் ஸ்ட்ரீர்ட் ஏடு தெரிவித்திருந்தது.

தற்போது தாம்சன் வெளியேறும் நிலையில் அவர் வைத்திருந்த 16 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை யாகூ நிறுவனத்திடமே ஒப்படைத்துள்லார். பே பால் நிறுவனத்திலிருந்து தாம்சன் வெளியேறி யாகூ நிறுவனத்துக்கு வந்ததற்காக நட்ட ஈட்டுத்தொகையும் கொடுக்கப்பட்டிருந்தது. தாம்சனுக்கு யாகூ நிறுவனம் ஒரு ஆண்டுக்கு 1 மில்லியன் டாலர் உதியம் கொடுத்து வந்தது. மேலும் 2 மில்லியன் டாலர் போனஸ் தொகையும் கொடுத்தது.

இந்நிலையில் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக ரோஸ் லெவின்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார். யாகூவின் போட்டியாளர்களான கூகுள் மற்றும் பேஸ்புக் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில் இவற்றை எதிர்கொள்ளும் வகையில் புதிய வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் யாகூ நிறுவனம் தற்போது உள்ளது. இதேபோல் சீனாவின் அலிபாபா குழுமத்துக்கு கம்பெனியின் குறிப்பிட்ட பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளையும் நிறைவு செய்ய வேண்டிய நிலைமை உள்ளது.

பங்குச் சந்தையில் யாகூ நிறுவனம் தற்போது முன்னைவிட ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறது என்பதே பொதுவாக சந்தை வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. அதே நேரத்தில் யாகூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக லெவின்சன் நியமிக்கப்பட்டது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதும் இணைய வல்லுநர்களின் கருத்து.

English summary
Yahoo’s dysfunctional turnaround efforts have morphed into a Silicon Valley soap opera, one that has taken another strange twist with the Internet company’s ousting of CEO Scott Thompson just four months after his arrival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X