For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடுதலைப் புலிகளுக்கு உதவியதே இந்தியாதான்- இலங்கை அதிகாரி

By Shankar
Google Oneindia Tamil News

 Prabhakaran
கொழும்பு: 1980-களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு இந்தியா உதவியதாக இலங்கையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

மூத்த பத்திரிகையாளர் சி.ஏ.சந்திரபிரேம எழுதிய "கோத்தபயவின் போர்' என்கிற புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி கொழும்பு நகரில் திங்கள்கிழமை நடந்தது. இதில் இலங்கையின் மிக மூத்த அதிகாரியும் அதிபரின் செயலருமான லலித் வீரதுங்க கலந்து கொண்டு பேசினார்.

புத்தகத்தில் இடம்பெற்றிருந்த விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறித்துப் பேசிய அவர், "1987 ஜூன் மாதத்தில் 'பூமாலை நடவடிக்கை' மூலமும், இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலமாகவும் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதை இந்தியா தடுத்து நிறுத்தியது.

1980களில் இந்திய உளவுத்துறையின் நிர்பந்தம் காரணமாக முக்கியக் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரை இலங்கை அரசு விடுவிக்க நேர்ந்தது.

எனினும் 2008-ல் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்கு வந்தபிறகுதான் இலங்கை மீதான இந்தியாவின் அணுகுமுறையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. இலங்கை அதிகாரிகளுடன் இந்தியா அவ்வப்போது பேச்சு நடத்தியதால், 2006 முதல் 2009 வரையிலான போரை இலங்கை ராணுவம் வெற்றிகரமாக நடத்தியது என்று வீரதுங்க தெரிவித்தார்.

English summary
The Indian intelligence agencies had a big hand in planning and executing terrorist strikes in Colombo in the mid-eighties, the President's Secretary Lalith Weeratunga said. Reading from a book, Gota's War, at its launch here, he said the role India played in Sri Lanka needed “intensive discussion.” He described the events described in the book as “home truths.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X