For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராசா ஜாமீனில் விடுதலை: 2ஜி வழக்கு நீர்த்துப் போகும்.. ஜெயலலிதா

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் 2ஜி வழக்கு நீர்த்துப் போகும் போலத் தெரிவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

போயஸ் கார்டனில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி,

கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆ.ராசா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளாரே?

பதில்: நீங்கள் சொல்லித்தான் இதை நான் கேள்விப்படுகிறேன். ஆனால், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ஒன்றும் இல்லாமல் வலுவிழந்து போய்க் கொண்டிருப்பது போல தெரிகிறது.

கேள்வி: ஏர்செல்- மேக்ஸிஸ் நிறுவன விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

பதில்: இந்த விவகாரத்தில் தான் எழுப்பிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டியது சுப்பிரமணிய சாமிதான். அதற்கு தக்க பதில் சொல்ல வேண்டியது ப.சிதம்பரத்தின் பொறுப்பு. இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்திடம்தான் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

கேள்வி: தமிழ்நாட்டில் மணல் கொள்ளை பற்றி செய்திகள் வருகிறதே?

பதில்: அதுபற்றி நான் கேள்விபடவே இல்லை. இதுபற்றி பிறகு பதில் சொல்கிறேன்

கேள்வி: உங்களது ஓராண்டு ஆட்சியின் சாதனை குறித்து..?

பதில்:
அது குறித்து பின்னர் கூறுகிறேன் என்றார்.

English summary
Chief Minister and All India Anna Dravida Munnetra Kazhagam general secretary Jayalalithaa on Tuesday said that granting of bail to former Union Minister A. Raja in the 2G spectrum case “definitely looks as though it [the case] is getting diluted.” She was responding to reporters near her Poes Garden residence here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X