Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி

Posted by:
Published: Saturday, May 19, 2012, 8:33 [IST]

 Woman Files Divorce Over Husband Single Facebook Status

ஒளரங்காபாத்: ஃபேஸ்புக்கில் திருமணமாகாதவர் என்று குறிப்பிட்டுள்ளதை திருமணமானவர் என்று மாற்ற மறுத்த கணவரிடம் இருந்து விவகாரத்து கோரி பெண் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் அதே மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மணந்தார். இது பெற்றோர்கள் பார்த்து வைத்து நடந்த திருமணம். அவர் பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண் விவாகரத்து கோரி ஒரங்காபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், எனது கணவர் ஃபேஸ்புக்கில் திருமணமாகாதவர் என்று குறிப்பிட்டுள்ளார். அதை திருமணமானவர் என்று மாற்ற மறுக்கிறார். அதனால் அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்குமாறு கேட்டு்க கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இது குறித்து அந்த கணவனிடம் கேட்டதற்கு, தி்ருமணம், வியாபாரம் என்று பிசியாக இருந்ததால் ஃபேஸ்புக்கில் திருமணமானவன் என்று மாற்ற மறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து அந்த தம்பதியை 6 மாத காலம் கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு விவகாரத்து ஆனவர்களில் மூன்றில் ஒரு சதவீதம் பேர் ஃபேஸ்புக் பிரச்சனையால் தான் பிரிந்தனர் என்று ஒரு சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
A 28-year old woman has filed for divorce in Aurangabad court as her husband refused to change the facebook status from single to married.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 5 wickets
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors won by 38 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 170 runs