For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலை வழக்கில் தொடர்புடைய ஜெயேந்திரருக்கு நித்யானந்தாவை குறைசொல்ல தகுதியில்லை: அகில பாரத அனுமன் சேனா

By Siva
Google Oneindia Tamil News

Nithyanantha
வேலூர்: கொலை வழக்கில் தொடர்புடைய ஜெயேந்திரருக்கு நித்யானந்தாவை குறைசொல்ல தகுதியில்லை என்று இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனாவின் நிறுவன தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வேலூர் மாவட்டம் ஏலகிரி மலையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நம் நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும் நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவி மலைவாழ் இனத்தைச் சேர்ந்த யாருக்கும் வழங்கப்படவில்லை. வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரும், மலைவாழ் இனத்தைச் சேர்நதவருமான பி.ஏ. சங்மாவை ஆதரிப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நாங்களும் சங்க்மாவை ஆதரிப்பது என்று தீர்மானித்துள்ளோம்.

தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சங்கராச்சாரியார் உள்பட எந்த ஒரு மடாதிபதியும் ஆறுதல் கூறவில்லை. ஆனால் நித்யானந்தாவோ தனது சொந்த செலவில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளித்து ஆறுதல் கூறினார். எந்த ஒரு மடாதிபதியும் தன்னை இந்து மதத்தின் மடாதிபதி என்று கூறவில்லை. இந்நிலையில் நித்யானந்தா மட்டுமே தன்னை ஒரு இந்து என்றும், தான் ஒரு இந்து மடாதிபதி என்றும், தான் வைத்திருப்பது இந்து அறக்கட்டளை என்றும் பதிவு செய்துள்ளார்.

மதுரை இளைய ஆதீனம் பதவிக்கு அவர் தகுதியானவரே. அதனால் எங்கள் கட்சி நித்யானந்தாவை ஆதரிக்கிறது. தன் மீது கொலை வழக்கு உள்ள காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா மீது குற்றம் சுமத்த தகுதியில்லை.

தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் சாமி தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு மக்கள் இலவசமாக சாமியை தரிசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பணம் வசூலிக்கப்பட்டால் நாங்கள் சென்னை கோட்டையை நோக்கி அறப்போராட்டம் நடத்துவோம் என்றார்.

English summary
Hindu Makkal Katchi-All India Hanuman Sena chief Sridharan told that Jayendrar who is an accused in Sankararaman murder case doesn't have the rights to accuse Nithyananda.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X