For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும்: கி. வீரமணி வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த சில நாள்களாக தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த போது, விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளதை நேரில் காண்டேன். திராவிடர் கழகத்தின் சார்பில் கடந்த மார்ச் மாதத்தில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு, காவிரிப் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கி வந்துள்ளோம்.

காவிரிப் பிரச்சினைக்கு அவ்வப் போது தற்காலிகத் தீர்வுகளை காணுவதே வழக்கத்தில் உள்ளது. மாறாக நிரந்தரத் தீர்வு என்பது கானல் நீராக உள்ளது. இந்த ஆண்டு ஜீன் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க கூடிய சூழல் இல்லை என்பதால் டெல்டா விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

காரணம், மேட்டூர் அணையின் மொத்தம் உள்ள கொள்ளளவு 93.47 ஆயிரம் கனஅடியாகும். ஆனால், தற்போது நீர்மட்ட அளவு 41.47 ஆயிரம் கனஅடிதான் உள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் நீரின் அளவு 84 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

நமக்கு இடைக்காலத் தீர்ப்பு நிவாரணமாக கர்நாடக அரசால் தரப்பட வேண்டிய அளவு 205 (தமிழ்நாட்டுக்கு) டி.எம்.சி. மே வரை முதல் 4 மாதங்களில் 137 ஆயிரம் கனஅடி.

ஜீலை 42. 76 ஆயிரம் கனஅடி, ஆகஸ்ட் 54.72 ஆயிரம் கனஅடி, செப்டம்பர் 29.36 ஆயிரம் கன அடி என குறுவை சாகுபடிக்கு இப்படித் தண்ணீர் பங்கீடு இருக்க வேண்டும் என்று ஏப்ரல் 1992-ம் ஆண்டிலேயே காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டு எடுத்து வைத்த வாதங்களின்படியே தான் மேற்காணும் அளவீடு ஆகும். ஆனால், கர்நாடக அரசு இந்த கணக்குப்படி நீர் அளிப்பதில்லை.

கர்நாடகாவில் கோடைப் பயிர் விவசாயத்துக்குத் தண்ணீர் தேவை என்பதால், பிப்ரவரி முதல் மே மாதம் வரை தங்களிடம் உள்ள நான்கு பெரிய அணைகளில் காவிரித் தண்ணீரைத் தேக்கி வைத்து கர்நாடகா அரசு அடவாடித்தனம் செய்து வருகிறது. இது பற்றி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடிவிவாதித்துப் பரிகாரம் தேடிட வேண்டிய காவிரிநீர்க் கண்காணிப்புக் குழு (MONITERING COMMITTEE) ) கூட்டப்படவே இல்லை. இதை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த தேசிய ஜனநாயக முன்னணி (NDA) அரசில் இந்த காவிரி ஆணையத்திற்குப் பிரதமர் (வாஜ்பேயி) தலைவராக இருப்பார் என்று அமைந்த போதே பிரதமர் போன்ற பல்வகைப் பொறுப்பைச் சுமப்பவர் தலைவராக இருந்தால் உடனடியாக தீர்வுக் காண முடியாமல் கூட்டங்களே நடக்க முடியாமல் போகக்கூடும், காலதாமதம் ஏற்படும், பருவத்தே பயிர் செய்ய வேண்டியது தள்ளிக் போகக் கூடும், உடனடி பரிகாரம் கிடைக்காமலும் போகக் கூடும் என்று நமது கழகம் சுட்டிக்காட்டியது.இதை ஏற்று வேறு தலைவரைப் போடவில்லை. அதனால் இவ்வளவு பெருஞ்சுமை. விவசாயிகளுக்கு ஏற்படும் நிலைமை உருவானது.

எனவே இது பற்றி இணக்கமாக மத்திய அரசு சிந்தித்து காவிரி நீர் ஆணையத்திற்கு ஒரு புதுத் தலைவரை, தேசிய நீர்வளத்துறை அமைச்சராகவோ அல்லது சிறந்த நீதிபதி தகுதியில் உள்ளவர்களோ அல்லது வழக்கில் சம்பந்தப்படாத மாநிலங்களைச் சார்ந்த வல்லுனர்களையோ நியமிக்க வேண்டும். கர்நாடகா அரசின் வறட்டுப் பிடிவாதத்தை மாற்றி நியாயமான தீர்வை மத்திய அரசு உருவாக்கி தர வேண்டியது அதன் தலையாய கடமையாகும்.

எனவே, காவிரி(ஆறு) ஆணையக் கூட்டத்தை அதன் தலைவரான பிரதமர் உடனடியாக கூட்டி இப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியது அவரச அவசியமாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Dravidar Kazhagam leader on Sunday asked Prime Minister Manmhohan to convene a meeting of the Cauvery River Authority to discuss the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X