For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேஸ் புக் காதலரை மணக்க கணவர்-மகளை பிரிந்து ஓடிய எம்.எல்.ஏ!

Google Oneindia Tamil News

Rumi Nath
சில்சார்: அஸ்ஸாமைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் ருமி நாத் என்பவர் பேஸ்புக் மூலம் தனக்குக் கிடைத்த காதலரை மணப்பதற்காக தனது கணவரையும் குழந்தையையும் பிரிந்து விட்டு காதலனுடன் ஓடிவிட்டார். மேலும் காதலர் சார்ந்த இஸ்லாம் மதத்திற்கும் அவர் மாறியுள்ளார். அவருக்கும், அவரது காதலருக்கும் திருமணமும் நடந்து விட்டது.

அஸ்ஸாமில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்க்கோலா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏதான் ருமி. இவரது கணவர் பெயர் ராகேஷ் குமார் சிங். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளாள்.

இந்த நிலையில், பேஸ்புக் மூலம் ஜாக்கி ஜாகிர் என்பவர் அறிமுகமானார். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக பழகி வந்தனர். இந்த நிலையில் தனது கணவரையும் குழந்தையையும் விட்டுவிட்டு வீட்டை விட்டு ஓடிய ருமி, ஜாகிரையே மணந்து கொண்டு விட்டார்.

முன்னதாக இதுகுறித்து ராகேஷ் குமார் சிங் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதில், மருத்துவப் பரிசோதனைக்காக ருமி சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் போயிருந்தபோது அவரை கடத்தி விட்டதாக கூறியிருந்தார். ஆனால் விசாரணையில் இவரது மனைவி, பேஸ்புக் காதலரை மணந்து கொண்ட செய்தி தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதக் கலவரம் வெடித்து விடாமல் தடுப்பதற்காக சில்சார் பகுதியில் சிஆர்பிஎப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

32 வயதான ருமி, தனது காதலருடன் வங்கதேசத்துக்குப் போய் விட்டார். ஒரு மாதத்திற்கு முன்பே ஜாகிரை அவர் மணந்து விட்டார். அவரது திருமண புகைப்படமும் கூட ஏற்கனவே உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. ஆனால் அதை அப்போது ருமி மறுத்திருந்தார். ஆனால் தற்போது காதலருடன் தலைமறைவாகி விட்ட நிலையில் தனக்கு காதலருடன் கல்யாணம் ஆகி விட்டதை சில நாட்களுக்கு முன்பு அவர் ஒத்துக் கொண்டார்.

இந்தக் கல்யாணத்தை நடத்தி வைத்தது மாநில அமைச்சர் சித்திக் அகமதுதான் என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து முதல்வர் தருண் கோகாயிடம் முறையிட்டுள்ளார் ராகேஷ் சிங்

தனது இரண்டாவது கல்யாண் குறித்து ருமி கூறுகையில், ஜாகிர்தான் எனது சட்டப்பூர்வமான கணவர். எனக்கும், ராகேஷ் சிங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விரைவில் நான் விவாகரத்து கோரவுள்ளேன்.

அரசியல் காரணங்களுக்காகத்தான் எனது 2வது கல்யாணத்தை நான் முன்பு மறுத்தேன். சுய விருப்பத்தின் பேரில்தான் நான் மதம் மாறினேன். எனவே இந்து திருமணச் சட்டம் எனக்குப் பொருந்தாது. விரைவில் எனது மகளை நான் எனது பொறுப்பில் சட்டப்படி எடுப்பேன் என்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ராஜ்யசபா தேர்தலின்போது பாஜக சார்பில் எம்.எல்.ஏவாக இருந்தவர் ருமி. அப்போது அவர் காங்கிரஸ் வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தார். இதையடுத்து அவரை பாஜக கட்சியிலிருந்து நீக்கியது. இதையடுத்து அவர் காங்கிரஸில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
A serious controversy has begun in Assam Congress politics after the MLA from Borkhola Dr Rumi Nath suddenly left her husband and two-year-old daughter and eloped with her Facebook friend Jackie Zakir to convert to Islam before marrying him. CRPF troops have been deployed in and around Silchar to thwart any attempt at communal violence because of this conversion. Rumi’s first husband Rakesh Kumar Singh lodged an FIR with police alleging that Rumi was kidnapped from Silchar Medical College and Hospital where she had gone for a medical check-up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X