Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கிங்பிஷர் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை மீண்டும் முடக்கியதால் நீடிக்கும் சிக்கல்

Posted by:
Published: Tuesday, May 29, 2012, 18:53 [IST]

 It Dept Freezes Kingfisher Airlines

டெல்லி: வருமான வரித்துறைக்கு பாக்கி வைத்ததால் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் மீண்டும் முடக்கப்பட்டுவிட்டன.

கடந்த பல மாதங்களாக கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது நிதிச் சிக்கலால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. ஊழியர்களின் சம்பளத்துக்கும் கூட சிக்கலாகிப் போய் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வருமான வரித்துறைக்கு ரூ342 கோடி பாக்கி வைத்திருக்கிறது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம். இதில் வாரந்தோறும் ரூ9 கோடியை செலுத்துவதாக கிங்பிஷர் நிறுவனம் உறுதி அளித்திருந்தது. ஆனால் 2 வாரங்கள்தான் ரூ4.5 கோடி செலுத்தியது. அதன் பிறகு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன வங்கிக் கணக்குகளை முடக்கியிருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே கலால் மற்றும் சுங்கத்துறை வாரியத்தின் தலைவர் எஸ்.கே. கோயல், கிங்பிஷர் நிறுவனம் ரூ54 கோடி பாக்கி வைத்திருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The income tax department has frozen Kingfisher Airlines‘ account again on charges on non payment of IT dues, exclusive sources told CNBC-TV18.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Royal Challengers Bangalore: 46 / 0, 4 Overs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 180 / 6, 59 Overs
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Kings XI Punjab won by 50 runs