For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வல்லரசு, பிராந்திய வல்லரசு என்ற போர்வையில் சிலநாடுகள் போதனை செய்ய முயற்சிக்கின்றன: ராஜபக்சே காட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

Rajapaksa
பாங்காங்: வல்லரசு, பிராந்திய வல்லரசு, பொருளாதார வல்லரசு என்ற பெயரில் பிற நாடுகளுக்கு போதனை செய்யும் நாடுகள் தங்களது நாடுகளின் நடத்தைகளை முதலில் பார்க்க வேண்டும் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.

தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:

புத்தர் பெருமானாரின் போதனைகள் 26 நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்ததைப்போல் இன்றைக்கும் பொருத்தமானவையாக உள்ளன. நவீன உலகின் தலைவர்கள் இந்த ஆலோசனைகளை பின்பற்றுவார்களாயின் பல உள்ளூர் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் மனித குலத்திற்கு நன்மைளிக்கும் வகையில் தீர்க்கப்படும்

சிறு வயதிலிருந்து புத்தரின் சித்தாந்தங்களின்அடிப்படையில் வளர்க்கப்பட்ட எமக்கு நீதியும் சட்டத்தின் ஆட்சியும் அந்நியமான எண்ணக்கருக்கள் அல்ல. எனவே இந்த சித்தாந்தங்களானவை ஏற்கெனவே அறிந்தவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டியவையல்ல.

ஒரு நபரின் அல்லது குழுவின் அல்லது சமூகத்தின் மேன்மை நிலை என்பது தெய்வீக உரிமையினலோ அல்லது பிறப்பின் மேன்மையினாலோ ஏற்படுவதல்ல. அது அவர்களின் நடவடிக்கையினாலேயே ஏற்படுகிறது. ஒரு குழு நடந்துகொள்ளும் முறைதான் அக்குழுவின் தகுதியைத் தீர்மானிக்கும்.

சில நாடுகளும் குழுக்களும் தமக்கு குத்தப்பட்ட வல்லரசு, பிராந்திய வல்லரசு, பொருளாதார வல்லரசு என்பன போன்ற முத்திரைகளின் அடிப்படையில் மற்றவர்களுக்கு போதனை செய்வதற்கு முயற்சி செய்கின்றன.

இந்நாடுகள் அவற்றின் நடத்தை அடிப்படையிலேயே மதிப்பிடப்பட்டு மற்றொரு நாட்டைவிட அது மேலானதா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும் என்றார் மகிந்த ராஜபக்ச.

English summary
Sri Lanka President Mahinda Rajapaksa said that in today’s world certain nations and groups have endeavoured to preach and lord over others by virtue of their given labels, such as super power, regional power, economic power etc.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X