Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கொழும்பில் கொடிகட்டிப் பறக்கும் பாலியல் தொழில்!

Posted by:
Published: Tuesday, June 12, 2012, 14:10 [IST]

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் கிழக்கு மாகாணப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கிராமப் பகுதிகள் அதிகம். ஆனால் இங்குள்ள பெரும்பான மக்களுக்கு வாழ்க்கை நடத்த தேவையான பொருளாதார வசதி இல்லை. இதனால், அங்குள்ள இளம் பெண்கள் கொழும்பு மற்றும் பிற பகுதிகளுக்கு சென்று தொழில் செய்ய விரும்புகின்றனர்.

இதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் கும்பல் அவ்வாறு வரும் பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து, கொழும்பில் சிறைவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த வறுமையில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்களே இந்த மோசடி கும்பலின் இலக்கு என கூறப்படுகின்றது.

வேலை பெற்றுத் தருவதாக கூறி, தங்களை சிலர் ஏமாற்றி கொழும்புக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக நுவரெலிய மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் போலீஸாரிடம் ரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, பதுளையில் திடீர் சோதனை நடத்திய போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக சிறை வைக்கப்பட்டிருந்த 11 இளம் பெண்களை மீட்டுள்ளனர்.

English summary
The sex trade is rising in Sri Lanka's Captial Colombo.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
England: 337 / 7, 94 Overs
Final , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST