Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

புத்தகம் மூலம் புயல் கிளப்ப தயாராகும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்

Posted by:
Published: Wednesday, June 13, 2012, 11:51 [IST]

 Former Madurai Collector Sagayam Turn Writer

சென்னை: முன்னாள் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் விரைவில் ஒரு புத்தகம் எழுதி வெளியிடப் போகின்றாராம்.

நேர்மையான, கண்டிப்பான அதிகாரி என பெயர் எடுத்த மதுரை கலெக்டர் சகாயம் திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.

இந்த மாறுதல் மதுரை மாவட்ட பொது மக்கள், அரசியல் கட்சி, சமூகநல அமைப்புகள் என பல்வேறு தரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதால், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலெக்டர் சகாயத்திற்கு ஆதரவாக மதுரையில் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரியான சகாயம் விரைவில் ஒரு புத்தகம் எழுத உள்ளாராம். அதில் தான் மக்களுடன் இணைந்து பணியாற்றியது, மூத்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு, நாட்டின் பொருளாதார முன்னேற்றம், ஏழைகள் உடனே செய்ய வேண்டியது, கல்வியின் அவசியம் என பல்வேறு தலைப்புகளில் எழுத ஆசையாக உள்ளாராம்.

மேலும் அரசியல்வாதிகளின் பல்வேறு முகங்கள், ஐ.ஏ.எஸ். பணியில் தான் சந்தித்த சவால்கள் போன்றவற்றையும் எழுத உள்ளாராம். இதற்காக அரசிடம் அனுமதி பெற காத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

பல உயர் அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்பு தான் புத்தகம் எழுதி புயலை கிளப்புவார்கள். ஆனால் சகாயம் கொஞ்சம் வித்தியாசமானவர் என்பதால், பணியில் உள்ள போதே நாட்டில் உள்ள பிணிகள் பற்றி புட்டுபுட்டுவைக்கப் போகின்றாராம். பலரது உண்மை முகம் விரைவில் வெளிச்சத்திற்கு வர உள்ளது.

English summary
Former Madurai collector Sagayam is planning to write a book about his experience as an IAS officer, the challenges he faced, the different faces of politicians and so on.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST