Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு அதிக பதக்கங்கள் கிடைக்கும்- முன்னாள் இந்திய வீரர்

Posted by:
Updated: Saturday, July 28, 2012, 12:47 [IST]

 Former Olympian Expresses Confidence India Will Good

ஜாம்ஷெட்பூர்: கடந்த 2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியை விட, இந்த ஆண்டு லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் சிறப்பாக செயல்பட்டு அதிக பதக்கங்களை நாட்டிற்கு பெற்று தருவார்கள் என்று முன்னாள் ஒலிம்பிக் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்தியர்களில் அபினவ் பிந்தரா(துப்பாக்கி சுடுதல்), சுசில் குமார்(மல்யுத்தம்), விஜேந்திர குமார்(குத்துச்சண்டை), கிருஷ்ணா புனியா(தட்டு ஏறிதல்) ஆகியோர் பதக்கங்களை பெற்றனர்.

இந்த நிலையில் கடந்த 1980ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட ஹர்பஜன் சிங், இந்த ஆண்டு நடைபெற உள்ள லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

அடுத்த மாதம்(ஜூலை) லண்டனில் துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒலிம்பிக் போட்டிகள் போன்ற பெரியளவிலான போட்டிகளில் வீரர்கள் பங்கேற்கும் போது, பதக்கம் வெல்ல வேண்டும் என்ற மனஅழுத்தம் ஏற்படுவது சகஜம்.

ஆனால் நாட்டிற்காக விளையாட உள்ள இந்திய வீரர்கள், வீராங்கனைகள் லண்டன் ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வென்று நாடு திரும்புவார்கள் என்று நம்புகிறேன். மல்யுத்தம், வில்வீரர்கள், பேட்மின்டன் ஆகிய விளையாட்டுகளில் கலந்து கொள்ள உள்ள வீரர்கள், வீராங்கனைகள் மீது அதிக நம்பிக்கை உள்ளது என்றார்.

Story first published:  Friday, June 15, 2012, 7:37 [IST]
English summary
Former Olympian Harbhajan Singh today expressed confidence that India will excel its medal tally compared to the last edition of the Olympic games even though the pressure was obvious on the last editions medal winners.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter