Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஷீரடிக்கு சென்ற பேருந்து ஆற்றுப் பாலத்தில் கவிழ்ந்தது: 32 பேர் பலி- 16 பேர் படுகாயம்

Posted by:
Published: Saturday, June 16, 2012, 10:32 [IST]

மும்பை: ஹைதராபாத்திலிருந்து ஷீரடி சாய்பாபா பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மஹாராஷ்டிராவின் உஸ்மானாபாத் அருகே ஆற்றுப் பாலத்தில் கவிழ்ந்து உருண்டதில் 32 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 16 பேர் படுகாயமடைந்தனர்.

ஹைதராபாத்திலிருந்து காவேஸ்வரி டிராவல்ஸ்க்கு சொந்தமான பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மஹாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடிக்கு பயணம் மேற்கொண்டனர்.

உஸ்மானாபாத் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஆற்றுப் பாலத்தில் கவிழ்ந்து உருண்டது. இதில் சம்பவ இடத்திலேயே 32 பேர் பலியாகினர். படுகாயமடைந்தோர் உஸ்மானாபாத், லத்தூர், சோலாப்பூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்த 16 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

English summary
At least 32 people were killed and 16 others injured on early Saturday when a private bus carrying pilgrims to Shirdi fell off a river bridge on the outskirts of Osmanabad town, around 450 km from Mumbai, police said.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST