Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பாலிடெக்னிக்கில் பிளஸ் 2 மாணவர்கள் 2-ம் ஆண்டில் நேரடியாக சேர புதிய நடைமுறை

Posted by:
Published: Saturday, June 16, 2012, 10:29 [IST]

டெல்லி: பாலிடெக்னிக்குகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக 2-வது ஆண்டில் சேரும் நடைமுறையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு மாற்றம் செய்துள்ளது.

பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிக்க சேர்வதற்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தால் போதும். அவர்கள் 3 ஆண்டு படிக்க வேண்டும். பிளஸ்-2 முடித்த மாணவர்கள பாலிடெக்னிக் படிக்கும்போது அவர்கள் முதலாம் ஆண்டு படிக்காமல் நேரடியாக 2-வது ஆண்டில் சேரலாம். இதுவே தற்போதுள்ள நடைமுறை.

இப்போது பிளஸ்-2 படிக்கும் போது "தொழில்கல்வி" படித்தவர்கள் மட்டும்தான் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-வது ஆண்டில் நேரடியாக சேரமுடியும் என்றும், வேறு குரூப் எடுத்தவர்கள் சேரமுடியாது என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.

இந்த புதிய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

English summary
All India Council of Technical Education has changed the admission of Plus 2 students in Polytechnics.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST