Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

3 வயது மகளை சீரழித்ததாக பிரான்ஸ் தூதரக அதிகாரி மீது மனைவி புகார்

Posted by:
Published: Saturday, June 16, 2012, 8:28 [IST]

பெங்களூர்: 3 வயது மகளை பிரான்ஸ் தூதரக அதிகாரியான தனது கணவரே கற்பழித்துவிட்டார் என்று பெண் ஒருவர் பெங்களூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பேலஸ் கிரவுண்ட்ஸில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி பாஸ்கல் மசூரியர்(39). அவரது மனைவி சுஜா ஜோன்ஸ். அவர் ஒரு இந்தியர். அவர்களுக்கு 2 மகன்களும், 3 வயது மகளும் உள்ளனர்.

பாஸ்கல் தங்கள் மகளுடன் தவறாக நடக்கிறாரோ என்று சுஜாவுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து கடந்த புதன்கிழமை அவர் தனது கணவரின் நடவடிக்கைகளை கவனிக்குமாறு வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அன்று மதியம் உணவு சாப்பிட வீட்டுக்கு வந்த பாஸ்கல் மகளுடன் பூட்டிய அறையில் 2 மணி நேரம் இருந்துள்ளார்.

இதையடுத்து சுஜா தனது மகளை பாப்டிஸ்ட் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்தார். பரிசோதனையில் குழந்தையை பாஸ்கல் கற்பழிக்க முயன்றது உறுதியானது. மருத்துவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சுஜா போலீசில் தனது கணவர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தார். முதலில் வழக்குப் பதிவு செய்ய மறுத்த போலீசார் பிறகு மூத்த வழக்கறிஞர் பிரமிளா நெசர்கியின் தலையீட்டையடுத்து வழக்குப் பதிவு செய்தனர். பாஸ்கலை விசாரிப்பதற்காக போலீசார் அவரை தங்கள் காவலில் எடுத்துள்ளனர்.

English summary
Suja Jones, wife of French consulate senior official working in Bangalore has accused her husband of sexually abusing their 3-year old daughter. Police have taken him into custody for questioning.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST