Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மாவுக்குத்தான் ஆதரவு: பிஜூ ஜனதா தளம் திட்டவட்டம்

Posted by:
Published: Saturday, June 16, 2012, 16:34 [IST]

புவனேஸ்வர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தாங்கள் முன்னிறுத்திய முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவை நிச்சயமாக ஆதரிப்போம் என்று பிஜூ ஜனதா தளம் அறிவித்துள்ளது.

ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் பிஜூ ஜனதா தளத் தலைவர்கள் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. முதல்வர் நவீன்பட்நாயக் தலைமையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிஜூ ஜனதா தளத்தின் துணைத் தலைவரும் ஒடிஷா நிதி அமைச்சருமான பிரபுல்ல காதி, சங்மாவை முழு மனதோடு நாங்கள் ஆதரிக்கிறோம். அவர் போட்டியிடுவார். அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

இதையே பிஜூ ஜனதா தளத்தின் நாடாளுமன்ற குழுத் தலைவரான அர்ஜூன் சேத்தியும் தெரிவித்துள்ளார். பழங்குடி இன மக்களின் முக்கிய தலைவர் சங்மா... அவரை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார்.

அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம்தான் சங்மாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருந்தன. பிஜூ ஜனதா தளத்துக்கு 104 எம்.எல்.ஏக்களும் மாநிலங்களவை உறுப்பினர்களை சேர்த்து மொத்தம் 21 எம்.பிக்களும் இருக்கின்றனர்.

English summary
With PA Sangma insisting on contesting the presidential poll, the ruling BJD in Odisha, which was the first to moot his name, said on Saturday there was no change in its decision to back him.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 5 wickets
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors won by 38 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 170 runs