Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

அன்று நடந்தது என்ன? காங்கிரஸுக்கு ஆகாமல் போனது ஏன்?: குண்டு போட வருகிறது கலாமின் புத்தகம்

Posted by:
Published: Saturday, June 16, 2012, 10:43 [IST]

 What Happened 2004 Kalam Sonia Meeting Read Latest Book

டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கும் தமக்கும் ஏழாம் பொருத்தமாகிப் போனதன் பின்னணி பற்றி புதிய புத்தகமான டர்னிங் பாயிண்ட்ஸில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் விவரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்துல்கலாம் ஏற்கெனவே அக்னி சிறகுகள் நூலில் தமது வாழ்க்கையை விவரித்திருக்கிறார். இந்நிலையில் இந்த மாதம் வெளியாக உள்ள டர்னிங் பாயிண்ட்ஸ் நூலில் பல குண்டுவீசும் ரக தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சோனியாவுக்கும் தமக்கும் இடையேயான பேச்சுவார்த்தையை அப்துல்கலாம் விவரித்திருப்பதாகத் தெரிகிறது. அதேபோல் பீகார் சட்டப்பேரவை கலைக்கப்பட்டது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் போது மன்மோகன்சிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்தும் கலாம் வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

காங்கிரஸுக்கு ஏன் ஆகாதவராகவே இருக்கிறார் என்பதற்கான பதிலைச் சொல்லும் விதமாக கலாமின் புத்தகம் வரவிருப்பதால் டெல்லி அரசியலில் இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

English summary
Former President APJ Abdul Kalam has come out with a forthright account of his years in Rashtrapati Bhavan in which he discloses "behind-the-scenes" details of his meetings with Sonia Gandhi after the 2004 Lok Sabha elections and with Manmohan Singh after the Supreme Court verdict on the dissolution of Bihar assembly.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST