Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

யூரோ கால்பந்து: ஸ்வீடனின் சாகச ஆட்டம் பலனில்லாமல் போனது! இங்கிலாந்துக்கு த்ரில் வெற்றி!

Posted by:
Published: Saturday, June 16, 2012, 9:24 [IST]

 England Send Sweden Packing From Euro 2012

வார்சா: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் ஸ்வீடனை வீழ்த்தி இங்கிலாந்து அணி த்ரில் வெற்றியைப் பெற்றது.

14-வது யூரோ கோப்பை போட்டியின் டி பிரிவு லீக் ஆட்டத்தில் ஏற்கெனவே தோற்றிருந்த ஸ்வீடன் அணி இங்கிலாந்து அணியுடன் மோதியது.

இங்கிலாந்து அணியின் கோரல் ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆனால் அதன் பின்னர் ஸ்வீடனும் இங்கிலாந்து அணியும் முதல் பாதியில் எந்த கோலும் அடிக்கவில்லை.

2-வது பாதியில் இங்கிலாந்து வீரர்களை அதிர்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு சென்றார் ஸ்வீடனின் மெல்பெர்க். 2-வது பாதியின் 49-வது நிமிடத்தில் தடாலடியாக ஸ்வீடனின் மெல்பெர்க் ஒரு கோலையும் 59-வது நிமிடத்தில் மற்றொரு கோலையும் போட ஸ்வீடன் சட்டென முன்னிலைக்குப் போனது. அதுவும் மெல்பெர்க் அந்தரத்தில் பறந்து தலையால் முட்டி கோலடித்த சாகசம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது.

வேறுவழியே இல்லாமல் உஷாராக ஆட வேண்டிய நிலையில் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அடுத்த 5-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இந்த கோலை இங்கிலாந்தின் வால்கோட் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனில் இருந்தன. ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் பரபரப்பான திருப்பமாக இங்கிலாந்தின் வெல்பெக் ஒரு கோலடிக்க இங்கிலாந்துக்கு முன்னணி கிடைத்தது.

ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தியது. டி பிரிவில் தொடர் தோல்விகளைச் சந்தித்திருக்கிற ஸ்வீடன் அணி இந்தப் பிரிவில் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறுகிறது.

English summary
England's Theo Walcott came into the match against Sweden as a substitute and registered a goal and an assist to lead his squad to a 3-2 victory over Sweden.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
England: 337 / 7, 94 Overs