Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

திருச்சி சிறையில் ஐ.பெரியசாமியுடன் மு.க. அழகிரி, மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Posted by:
Published: Saturday, June 16, 2012, 12:14 [IST]

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னான் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் குட்டிக்கரடு மலைப் பகுதியில் அரசு அனுமதி இன்றி கல்குவாரி நடத்திய வழக்கில் ஐ.பெரியசாமி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்படுட்ள்ளார்.

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐ.பெரியசாமியை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அதே போல முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐ.பெரியசாமியை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். இதே போல், தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மீது அ.தி.மு.க. அரசு பொய் வழக்குகள் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. வழக்குகள் தி.மு.க.வுக்கோ, அல்லது நிர்வாகிகளுக்கோ புதிது அல்ல. பொய் வழக்குகளை சட்டப்படி சந்திப்போம். ஜெயலலிதாவைப் போல் வாய்தா மோல் வாய்தா வாங்கிக் கொண்டு ஓடமாட்டோம் என்றார்.

திமுகவில் பல அமைச்சர்கள் மு.க.அழகிரி ஆதரவாளர் என்றும், மு.க.ஸ்டாலின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. பல்வேறு வழக்கில் சிக்கிய மு.க. அழகிரி ஆதரவாளர்களை மு.க.ஸ்டாலின் சந்திக்க மாட்டார். அதே போல, மு.க. ஸ்டாலின் ஆதரவாளர்கள் சிறையில் இருந்த போது மு.க. அழகிரி சென்று சந்திக்கவில்லை. இந்த நிலையில், ஐ.பெரியசாமியை மட்டுமே இந்த இரு பிரபலங்களும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளது குறிப்பிடதக்கது.

English summary
Union Minister M K Alagiri, Former Deputy Chief Minister M.K. Stalin visited former minister I.Periyasamy in trichy prison.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Sunrisers: 83 / 4, 15.5 Overs