Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

தூத்துக்குடி: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.17 லட்சம் மோசடி- விற்பனையாளர் கைது

Posted by:
Published: Saturday, June 16, 2012, 10:26 [IST]

தூத்துக்குடி: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 17 லட்ச ரூபாய் மோசடி தொடர்பாக விற்பனையாளர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சந்திரகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் எட்டயபுரம் என். வேடப்பட்டியை சேர்ந்த விஜயபாண்டி செயலாளராகவும், ஒட்டப்பிடாரம் தாலுகா மலைப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த மாடசாமி நியாய விலைக்கடை விற்பனையாளராகவும் பணியாற்றி வந்தனர்.

இவர்கள் கடந்த 23.12.09 முதல் 16-5-2011 வரையிலான காலத்தில் அடகு நகைகள் இல்லாமலேயே நகை கடன் வழங்கியதாக பொய் கணக்கு எழுதியும், நியாய விலைக்கடை விற்பனை தொகையை சங்க கணக்கில் கொண்டு வராமலும், விற்பனை தொகையை குறைத்து வரவு வைத்தும் ரூ 17,78,685 கையாடல் செய்ததாக கோவில்பட்டி கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சிவகாமி தூத்துக்குடி வணிகவியல் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணயில் விற்பனையாளர் மாடசாமி கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

English summary
The Agricultural Cooperative bank dealer was arrested for Rs 17 lakh fraud in Tuticorin.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
ENG Vs NZ - 1st ODI at Lord's Cricket Ground Fri 31st May ODI
NET Vs SA - Only ODI at VRA Ground Fri 31st May ODI
ENG Vs NZ - 2nd ODI at The Ageas Bowl Sun 2nd Jun ODI