Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மெக்ஸிகோவில் ராஜபக்சேவை சந்திக்கிறார் மன்மோகன்சிங்

Posted by:
Published: Sunday, June 17, 2012, 11:54 [IST]

 Manmohan Singh Meet Rajapaksa

லா காபோஸ்: ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேச உள்ளார்.

மெக்ஸிகோ நாட்டில் உள்ள லா காபோஸ் நகரில், ஜி-20 மாநாடு விரைவில் நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். மேலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். அப்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க இருக்கிறார்.

இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைத்து தலைவர்களையும் மன்மோகன் சிங் சந்திக்கும் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அதிபரின் பெயரும் இடம் பெற்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இதன் பினன்ர் இருநாட்டு தலைவர்களிடையேயான முதலாவது சந்திப்பு என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

English summary
Sri Lankan President Mahinda Rajapaksa, who is in Cuba, is to meet Prime Minister Manmohan Singh on the sidelines of the G-20 summit in Los Cabos.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter