Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

எதியூரப்பா அதிரடி- குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு

Posted by:
Published: Tuesday, June 19, 2012, 14:43 [IST]

 President Poll Live Pranab Mukherjee Gets Yeddyurapp

பெங்களூர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய திருப்பமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு கர்நாடக முன்னாள் முதல்வரான எதியூரப்பா ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

பாஜக மேலிடத்தைத் தொடர்பு கொண்ட எதியூரப்பா, பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கும் முடிவைத் தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றையும் பெங்களூரில் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மேனகா காந்தி ஏற்கெனவே பிரணாப் முகர்ஜி வீட்டுக்கே சென்று ஆதரவு தெரிவித்துவிட்டு வந்தார். எப்படா காங்கிரஸ் வாசல் திறக்கும் என்று காத்துக் கொண்டிருந்த எதியூரப்பாவுக்கு வழிகாட்டிவிட்டார் மேனகா காந்தி. கர்நாடக முதல்வர் பதவி கேட்டு ஓய்ந்துபோன எதியூரப்பா நேற்றுதான் தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூலமாக சதானந்த கவுடாவுக்கு 3 நாள் கெடு விதித்திருக்கிறார்.. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்ட.

இந்நிலையில் அடுத்த அதிரடியாக பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் எதியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பிரணாப்புக்கு வாக்களிக்கக் கூடும். இதைவைத்துக் கொண்டு காங்கிரசின் கரிசனையை பெற்றுவிடலாம் என்பதே அவரது கணக்கு.

English summary
BS Yeddyurappa conveys to BJP high command to support Pranab Mukherjee as Presidential candidate. Yeddyurappa is likely to make a statement in Bangalore soon.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter