Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

லண்டன் ஒலிம்பிக் தொடக்க விழாவில் 'நான்தான் ஙொப்பண்டா, நல்லமுத்து பேரண்டா!'

Posted by:
Published: Tuesday, June 19, 2012, 15:49 [IST]

 Ilayaraja S Song Be Aired London Olympics

லண்டன் லண்டனில் தொடங்கப் போகும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒலிக்கப் போவதாக தகவல்கள் பரவியுள்ளன. இங்கிலாந்து வரும் தகவல்களும் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளதால், இளையராஜா ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

அதிலும் இளையராஜாவின் இந்தப் பாடல் தமிழிலேயே ஒளி, ஒலிபரப்பாகப் போவதுதான் ஹைலைட். உலக அளவிலான கலாச்சாரங்களையும், கலைகளையும் ஒருங்கிணைத்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். அதில் மொத்தம் 86 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அதில் ஒன்றுதான் இளையராஜாவின் பாடல் என்று இங்கிலாந்து நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தப் பாடல் எது என்று தெரியுமா.... 1981ம் ஆண்டு இளையராஜா இசையில் வெளியாகி ஹிட் ஆன நான்தான் ஙொப்பண்டா, நல்லமுத்து பேரண்டா.. என்ற பாடல்தான் அது. கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடிப்பில் உருவான ராம் லட்சுமண் படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

வாலியின் விறுவிறு வரிகளும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலும், இளையராஜாவின் ரகளையான இசையும் இணைந்து இப்பாடலை ஹிட்டாக்கியிருந்தன. இந்தப் பாடல் அந்தக் காலத்தில் விறுவிறுப்பான பாடலாக ரசிக்கப்பட்டது. இப்போது ஒலிம்பிக் களத்தில், உலகப் புகழ் பெற்ற இசைப் பதிவுகளுக்கு மத்தியில் இளையராஜாவின் இந்தப் பாடல் இடம் பெறப் போவது குறிப்பிடத்தக்கது.

உண்மைதான்...

இதுகுறித்து சென்னையில் உள்ள இளையராஜாவின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, "லண்டன் ஒலிம்பிக்கில் இந்தப் பாடல் இடம்பெறுவது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது," என்றனர்.

English summary
Maestro Ilayaraja's song to be aired in London olympics opening ceremony. The song Nanthan Goppanda Nallamuthu Peranda from Kamal Hassan starrer Ram Lakshman will be aired.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
CSK Vs MI - Qualifier 1 at Feroz Shah Kotla Tue 21st May IPL
RR Vs SUN - Eliminator at Feroz Shah Kotla Wed 22nd May IPL
IRE Vs PAK - 1st ODI at Castle Avenue Thu 23rd May ODI