Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

2 அணிகளை அனுப்பினால் ஒலிம்பிக்கிலிருந்து விலகுவேன்- பயஸ் அதிரடி

Posted by:
Published: Wednesday, June 20, 2012, 17:52 [IST]

 I Will Withdraw From Olympics Paes

டெல்லி: ஒலிம்பிக் போட்டிக்கு 2 டென்னிஸ் அணிகளை அனுப்பும் அகில இந்திய டென்னிஸ் சங்க முடிவுக்கு லியாண்டர் பயஸ் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதை ஏற்க முடியாது என்றும் கூறி விட்டார்.

லியாண்டர் பயஸும், மகேஷ் பூபதியும் சேர்ந்து ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் போட்டியில் விளையாடுவார்கள் என்று டென்னிஸ் சங்கம் அறிவித்தது. ஆனால் அதை மகேஷ் பூபதி ஏற்கவில்லை. அதேபோலஅவருடன் சேர்ந்து கொண்டு ரோஹன் போபண்ணாவும் பயஸுடன் விளையாட முடியாது என்று கூறி விட்டார்.

மகேஷ் பூபதி மற்றும் போபண்ணாவின் இந்தப் பேச்சால் பயஸ் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளார். இந்த நிலையில் சர்ச்சையைத் தீர்க்க மகேஷ்பூபதி, போபண்ணா ஜோடி மற்றும் பயஸ் மற்றும் யூகி பம்ப்ரி என இரண்டு அணிகளை அனுப்ப இந்திய டென்னிஸ் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஆனால் இதற்கு பயஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். எனது கோரிக்கையை ஏற்காவிட்டால் நான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்றும், அவர் அதிரடியாக கூறியுள்ளார்.

பயஸின் முடிவால் இந்தியாவுக்கு டென்னிஸில் ஒரு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு தரிசாகப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

English summary
If AITA go ahead with two teams to London Olympics, I will withdraw from the team, said Paes.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
CSK Vs MI - Qualifier 1 at Feroz Shah Kotla Tue 21st May IPL
RR Vs SUN - Eliminator at Feroz Shah Kotla Wed 22nd May IPL
IRE Vs PAK - 1st ODI at Castle Avenue Thu 23rd May ODI