Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

விவேக் எப்படி ஜான்பாண்டியனை கிண்டலடிக்கலாம்: தியேட்டரை சூறையாடிய கும்பல்

Posted by:
Published: Wednesday, June 20, 2012, 17:00 [IST]

 John Pandian S Supporters Attack Theatre

நெல்லை: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாணடியன் பற்றிய தரக்குறைவான விமர்சனம் தொடர்பாக நெல்லையில் உள்ள ஒரு தியேட்டரை ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் சூறையாடினர். இது தொடர்பாக போலீசார் 6 பேரை தேடி வருகின்றனர்.

சுந்தர் சி. நடித்த முரட்டு காளை நெல்லை டவுனில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தில் காமெடி நடிகரான விவேக் ஜான் என்னும் நபரை கிண்டல் செய்யும் வசனம் இடம் பெற்றுள்ளது. அதில் கூறப்படும் வார்த்தைகள் நெல்லை ஜான் பாண்டியனை கிண்டல் செய்யப்படுவதாக காணப்படுகிறது. இதை கண்டித்து சமுதாய தலைவரின் ஆதரவாளர்கள் 2 நாட்களுக்கு முன்பு தியேட்டருக்கு சென்று சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் தியேட்டரில் சர்சைக்குரிய வசனங்கள் நீக்கப்படவில்லை.

இதனால் கோபம் அடைந்த ஆதரவாளர்கள் நேற்று இரவு 9.30 மணிக்கு தியேட்டருக்கு சென்று ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் தியேட்டரின் ஷோகேஸ் கண்ணாடி மற்றும் கேன்டீன் கண்ணாடிகள் ஆகியவற்றை உடைத்தனர். இது குறித்து தியேட்டர் மேலாளர் சுப்பிரமணியன் நெல்லை பாலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ், சப்-இன்ஸ்பெக்டர் ரேனியஸ், ஜேசுபாதம் ஆகியோர் இது குறித்து விசாரித்து அடையாளம் தெரியாத 6 பேரை தேடி வருகின்றனர்.

English summary
Dalit leader John Pandian's supporters attacked a theatre in Tirunelveli as they refused to remove some dialogues from the movie Murattukalai.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST