Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு பிரணாப்புக்கா? இன்று ஆலோசனை

Posted by:
Published: Thursday, June 21, 2012, 10:55 [IST]

 Left Take Call On Pranab As President

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகளின் ஆதரவு யாருக்கு என்பது இன்று அறிவிக்கப்பட உள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் முன்னிறுத்தியுள்ளது. பி.ஏ.சங்மாவை தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஆதரிக்கக் கூடும் எனத் தெரிகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரணாப் முகர்ஜியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிவசேனா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆதரிக்கலாம்.

இந்நிலையில் இடதுசாரிக் கட்சிகளான மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட், பார்வார்டு பிளாக் ஆகியவற்றின் நிலைப்பாடு அறிவிக்கப்படாமல் இருந்தது வந்தது. இன்று இக்கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.

விலை உயர்வு உள்ளிட்டவைகளுக்கு பிரணாப் முகர்ஜிதான் காரணம் என்பதால் அவரை ஆதரிக்க இடதுசாரிகள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் பாஜக கூட்டணியை ஆதரிக்க முடியாத காரணத்தால் வேறுவழியின்றி பிரணாப்பையே இடதுசாரிகள் ஆதரிக்கக் கூடும் என்றே தெரிகிறது. இடதுசாரித் தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவும் திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
.

English summary
On a day when the BJP will reveal its candidate, top leaders of the Left parties will also meet in New Delhi on Thursday to take a decision on the issue of supporting the United Progressive Alliance Presidential candidate Pranab Mukherjee.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter